Saturday, 5 September 2026

Vanthiden Vanthiden (வந்திடேன் வந்திடேன் வெறும் கையாய் சமூகம் வந்திடேன்) Song lyrics

 வந்திடேன் வந்திடேன் வெறும்

கையாய் சமூகம் வந்திடேன் - 2

நாடி தேடி தினம் ஓடிடுவேன் நாதன்

இயேசு அன்பை விதைத்திடுவேன்

தேசம் இல்லை எங்கும் சென்றிடுவேன்

நேசர் வருகையை உரைத்திடுவேன்

வந்திடேன்...... - 2

லாபமான அனைத்தையுமே நஷ்டம்

என்று நான் கருதுகிறேன்

சேர்த்து வைக்க இங்கு ஒன்றுமில்லை

சேர்த்துக் கொள்ளும் உம்

வருகையிலே

வந்திடேன்........ - 2

பரலோகத்தில் பொக்கிஷம் சேர்க்க

பாதாளத்தில் கொள்ளையடிப்பேன்

பரமனே உமக்கென வாழ்ந்திடுவேன்

பரலோக தேவனுக்காய் ஆள்

சேர்ப்பேன்

வந்திடேன்..... - 2

வெறும் கையாய் பரலோகம்

வந்திடேன்